1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India vs australlia t20 match today mohali

இந்தியா vs ஆஸ்திரேலியா… மொஹாலியில் இன்று முதல் டி 20 போட்டி!

இந்தியா
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி 20 தொடர் இன்று மாலை பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடக்க உள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இரு அணிகளும் டி 20 தொடரில் மோத உள்ளதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் கூட மோதும் வாய்ப்பைப் பெறவில்லை. விரைவில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலியின் பார்மும், பூம்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியவர்களும் மீண்டும் அணியில் இணைந்திருப்பது பலமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
“தயவு செய்து ஒருவரை மட்டும் ஹீரோவாக வழிபடாதீர்கள்…” கௌதம் கம்பீர் குற்றச்சாட்டு!