இந்தியா வந்ததும் “பீப்” சாப்பிட்டு கொண்டாடிய புலிகள்! – காட்டுக்கு செல்வது எப்போது?
நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட சிவிங்கி இன சிறுத்தை புலிகள் மத்திய பிரதேசத்தின் குணோ தேசியப்பூங்காவில் பாதுகாக்கப்படுகிறது.
இந்தியாவில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் முன்னதாக சிவிங்கி இன சிறுத்தைப்புலிகள் வாழ்ந்து வந்தன. மனிதர்களின் வேட்டை மோகத்தால் அழிந்து போன சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு இந்திய அரசு 8 சிவிங்கி சிறுத்தைகளை நமீபியா நாட்டிலிருந்து கொண்டு வந்துள்ளது.
5 பெண் மற்றும் 3 ஆண் என மொத்தம் 8 சிறுத்தைகள் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்டு மத்திய பிரதேசத்தின் குணோ தேசியப்பூங்காவில் பராமரிக்கப்படுகின்றன. பயணத்தின் போது அவைகளுக்கு உணவுக் கொடுக்கப்படாத நிலையில் பூங்காவில் அவற்றிற்கு தலா இரண்டு கிலோ மாட்டிறைச்சி தரப்பட்டுள்ளது. அவற்றை சிறுத்தைகள் விரும்பி உண்டுள்ளன.
இந்திய தட்பவெப்ப சூழலை சிறுத்தைகள் புரிந்து கொள்ள கால அவகாசம் எடுக்கும் என்பதால் அவை தற்போதைக்கு தனிப்பட்ட வளையப்பகுதியில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. ஒரு மாத காலம் கழித்து அவை காட்டில் சுதந்திரமாக விடப்படும் என கூறப்பட்டுள்ளது.