திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (22:56 IST)

சோழபுரம் பேரூராட்சி செயல்அலுவலரை இடமாற்றம் செய்யகோரி சமூக வலைதளங்களில் பரவும் போஸ்டர்

poster
மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி  செயல்அலுவலரை இடமாற்றம் செய்யகோரி சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
 
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி 10 வார்டு கவுன்சிலர் தேவி(மார்க்.கம்யூ) சார்பில் சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அதில் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத, வார்டுகளுக்கான கோரிக்கையை பரிசீலிக்காத, ஊழியர்கள் செய்கின்ற தவறுகளுக்கு ஆதரவாக செயல்படும் செயல் அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக பணிபுரியும் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.