தொடர்புடைய செய்திகள்
- இந்தியர்களை மீட்க ஆப்கானிஸ்தான் செல்கிறது சிறப்பு விமானம் – மத்திய அரசு அறிவிப்பு!
- ஆப்கனில் இருந்து வெளியேறிய 129 இந்தியர்கள்: தூதரகம் மூடப்பட்டதாக தகவல்!
- இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பா?
- 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்கள்: இரண்டாவது இன்னிங்ஸில் திணறும் இந்தியா!
- கேரளாவில் இன்று ஒரே நாளில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு
தொடர்ந்து 40 ஆயிரத்திற்கு கீழ் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 32,937 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,22,25,513 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 437 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,31,642 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,14,11,924 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,81,947 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
