ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (08:40 IST)

ஆப்கனில் இருந்து வெளியேறிய 129 இந்தியர்கள்: தூதரகம் மூடப்பட்டதாக தகவல்!

ஆப்கனில் இருந்து வெளியேறிய 129 இந்தியர்கள்: தூதரகம் மூடப்பட்டதாக தகவல்!
ஆப்கானிஸ்தானில் தற்போது அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ள நிலையில் ஆப்கனில் இருந்து 129 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி வந்த அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கையை ஓங்கி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் தாலிபான்களை சமாளிக்க முடியாமல் திணறிய ஆப்கான் அரசு ஒரு கட்டத்தில் கிட்டதட்ட அனைத்து பகுதிகளையும் இழந்தது 
 
இந்த நிலையில்தான் தலைநகர் காபூல் உள்பட பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிய தாலிபான்கள் தற்போது தங்கள் தலைமையை ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளனர். ஆப்கன் அதிபர் அர்ஷப் கானி நாட்டை விட்டு சென்று விட்டதை அடுத்து விரைவில் தாலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்தியா தனது தூதரகத்தை மூடும் பணியை தொடங்கி உள்ளதாகவும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் நேற்று தாயகம் புறப்பட்டு டெல்லி வந்து சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் தங்கள் தூதரகங்களை மூட முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது