செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடலில் கால்சியம் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்கள் என்ன...?

கால்சியம் குறைபாட்டிற்கு மிக முக்கிய காரணம் உட்கொள்ளும் உணவில் கால்சியம் பற்றாக்குறையாகும். அதிகப்படியான உடல் செயல்பாடுகள் மற்றும் அதீத  உடற்பயிற்சி கால்சியம் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. 

வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலில் வைட்டமின் டி குறைபாடுகளும் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. 
 
குளிர்பானங்களை கட்டுப்பாடில்லாமல் உட்கொள்வது கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதால்,  மாதவிடாய் நிறுத்தத்தில் கால்சியம் குறைபாட்டை எதிர்கொள்கின்றனர். 
 
அதிக அளவு கொழுப்பு, சர்க்கரைகள் மற்றும் புரதங்களின் உட்கொள்ளல் கால்சியம் குறைபாட்டை விளைவிக்கின்றன. தேநீர், காபி, குளிர்பானம், உப்புக்கள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. 
 
வழக்கமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் கால்சியம் குறைபாட்டைத் தடுக்க இயலும். கால்சியம் நிறைந்த உணவுகளை, அதாவது சீஸ், பாலாடைக்கட்டிகளை சாப்பிடுங்கள் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 
 
வைட்டமின் டி-யை சூரிய ஒளியில் இருந்தும், ஆரோக்கியமான சீரான உணவுகளிலிருந்தும் பெறுங்கள். கால்சியம் குறைபாட்டைத் தடுக்க உணவில் குறைந்தளவிலேயே உப்பை உட்கொள்ளுங்கள். புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள். 
 
உடலில் கால்சியத்தை அதிகரிக்க கீரை  ப்ரோக்கோலி, அத்தி, உலர் பழங்கள் மற்றும் பச்சை  காய்கறிகளை சாப்பிடுங்கள்.