இந்தியர்களை மீட்க ஆப்கானிஸ்தான் செல்கிறது சிறப்பு விமானம் – மத்திய அரசு அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களை மீட்க இன்று சிறப்பு விமானம் அனுப்பப்படுகிறது.
பலகாலமாக ஆப்கானிஸ்தானில் அரசு ராணுவத்திற்கும், தலீபான்களுக்கும் இடையே யுத்தம் நடந்து வந்த நிலையில் அமெரிக்க படைகள் வெளியேறியதால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வாழும் பிறநாட்டு மக்களை திரும்ப வரும்படி அந்தந்த நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்காக சிறப்பு விமானங்களை உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் அனுப்ப தொடங்கியுள்ளன.
இந்தியாவிலிருந்து முதலில் சிறப்பு விமானம் அனுப்பப்பட்டு பலர் மீட்கப்பட்டு இன்று இந்தியா வந்து சேர்ந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள மேலும் சில இந்தியர்களை மீட்க இன்று 12.30 மணியளவில் சிறப்பு விமானம் இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு செல்கிறது. இதுதவிர மேலும் இரண்டு விமானங்களை தயார் நிலையில் வைக்க ஏர் இந்தியாவிற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.