1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona daily cases drop down under 30 thousand

தொடர்ந்து அதிகரித்து வரும் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

India
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 37,875 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,30,96,718 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 369 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,41,411 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,22,64,051 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,91,256 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வருவதால் உண்டாகும் பலன்கள் !!