1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Maharashtra in corona third wave

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடக்கம்! – அதிகாரப்பூர்வ அறிவிப்பால் பரபரப்பு!

Maharashtra
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாவது அலையால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் தற்போது சில வாரங்களாக குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தினசரி பாதிப்புகள் 300க்கும் கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது 400ஐ தாண்டியுள்ளது. இதனால் மும்பை மேயர் கிஷோரி பட்னேகர், மும்பையில் கொரோனா மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், விநாயகர் சதுர்த்தியை வீட்டிலிருந்தே கொண்டாடவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதல் இரண்டு அலைகளால் பெரும் பாதிப்புக்கு உள்ளான மகாராஷ்டிராவிலேயே மூன்றாவது அலையும் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! – ஆட்சியர்களுடன் இன்று அவசர ஆலோசனை!