1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Police recommend discipline actions for students

பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம்; 208 பேர் மீது புகார்! – ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை!

Chennai
ரூட்டு தல பஞ்சாயத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காவல்துறை பரிந்துரைத்துள்ளது.


கடந்த 1ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் இடையே நடந்த ரூட்டு தல விவகாரத்தில் கூட்டமாக சென்று பச்சையப்பன் சிலைக்கு மாலை அணிவித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து 200 மாணவர்கள் மேல் வழக்குப்பதிவு உள்ளது.

இந்நிலையில் 3ம் தேதி பேருந்தில் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக அட்டகாசம் செய்து கொண்டு சென்றதாக 8 மாணவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாணவர்களிடம் பேசிய காவல்துறையினர் மாணவர்கள் ஒழுக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் இந்த 208 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கல்லூரி நிர்வாகத்திற்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தொடர்ந்து அதிகரித்து வரும் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!