1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases increases in India

அதிகரிக்கும் தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியா
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்புகள் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,549 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,17,26,507 ஆக உயர்ந்தது. மேலும், புதிதாக 422 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,25,195 ஆக உள்ளது. 
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,887 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,08,96,354 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 404958 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இந்தியாவில் இதுவரை 47,85,44,114 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
முதன்முறையாக முன்பதிவில்லாத சிறப்பு ரயில்! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!