தொடர்புடைய செய்திகள்
- கோதுமையில் ரூபெல்லா வைரஸ் - இந்திய சரக்கு ஏற்க மறுப்பு!
- 53.35 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி
- இந்தியாவிலேயே அதிக கோவில்கள் உள்ள மாநிலம்..? – மும்பை ஐஐடி வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!
- 3,000 நெருங்கும் தினசரி பாதிப்புகள் – இந்திய கொரோனா நிலவரம்!
4,000 நெருங்கும் தினசரி பாதிப்புகள் – இந்திய கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக 3 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்த பாதிப்புகள் மீண்டும் குறைந்து வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,712 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,64,544 ஆக உயர்ந்தது. புதிதாக 5 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,641 ஆக உயர்ந்தது.
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,584 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,20,394 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 19,509 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 1,93,70,51,104 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 12,44,298 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
