1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamilnadu have a maximum temples in iNdia

இந்தியாவிலேயே அதிக கோவில்கள் உள்ள மாநிலம்..? – மும்பை ஐஐடி வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!

Temple
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல கடவுள்களுக்கும் கோவில்கள் உள்ள நிலையில் எந்த மாநிலத்தில் அதிக கோவில்கள் உள்ளன என்ற ஆய்வு முடிவை மும்பை ஐஐடி வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பெரும்பாலான இந்து மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கோவில்கள் அவர்களின் நம்பிக்கையின் ஒரு பகுதியாக உள்ளன. இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள் உள்ள நிலையில் ஏராளமான கோவில்களும் நாடு முழுவதும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் மும்பை ஐஐடி எந்த மாநிலத்தில் அதிகமான கோவில்கள் உள்ளன என ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அதில் அதிகமான கோவில்கள் உள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. மும்பை ஐஐடி வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி தமிழ்நாடு முழுவதும் 79,154 கோவில்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய கோவில்கள், குலதெய்வ கோவில்கள், கிராமங்களில் உள்ள கோவில்கள் இடம்பெற்றுள்ளதா என்பது தெரியவில்லை.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கு உபி அமைச்சர் கண்டனம்!