1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 6.5 lakh students fail to attend public exam

பொதுத்தேர்வுகளில் எத்தனை லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை தெரியுமா?

பொதுத்தேர்வு
பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளி கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

 
கடந்த சில நாட்களாக பொதுத்தேர்வு நடைபெற்றது என்பதும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு எழுதினார்கள். தற்போது பொதுத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தொடங்கியுள்ளது. 
 
11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்வுகளில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
12 ஆம் வகுப்பு தேர்வுகளில் 1.95 லட்சம், 11 ஆம் வகுப்பு தேர்வில் 2.58 லட்சம், 10 ஆம் வகுப்பு தேர்வில் 2.25 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை. 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மொத்தம் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
4,000 நெருங்கும் தினசரி பாதிப்புகள் – இந்திய கொரோனா நிலவரம்!