1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (08:04 IST)

கோதுமையில் ரூபெல்லா வைரஸ் - இந்திய சரக்கு ஏற்க மறுப்பு!

இந்தியாவில் இருந்து துருக்கி நாட்டுக்கு அனுப்பப்பட்ட கோதுமை சரக்குகளை துருக்கி அரசு ஏற்க மறுத்துள்ளது. 

 
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கோதுமை விலை ஏறிக்கொண்டு வருவதை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் .
 
இந்த கோரிக்கையை ஏற்று கோதுமை ஏற்றுமதி தடை செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் பிற நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு கோதுமை தேவை இருந்தால் மத்திய அரசின் அனுமதியோடு ஏற்றுமதி செய்யலாம் என அறிவித்தது. 
 
இந்நிலையில் இந்தியாவில் இருந்து துருக்கி நாட்டுக்கு அனுப்பப்பட்ட கோதுமை சரக்குகளை துருக்கி அரசு ஏற்க மறுத்துள்ளது. இந்த கோதுமையில் ட்டோசானிட்டரி இருப்பதாக புகார் கூறியுள்ளனர். மேலும் கோதுமையில் ரூபெல்லா வைரஸ் தொற்று இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், 56,877 மில்லியன் டன் கோதுமை சரக்கு இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.