தொடர்புடைய செய்திகள்
- நேர்மறை விமர்சனங்களைக் குவிக்கும் மேதகு!
- ஒருநாள் போட்டிகளில் 22 ஆண்டுகள்… சச்சினின் சாதனையை தகர்ப்பாரா மிதாலி ராஜ்!
- பெல்ஜியத்திடம் தோற்று வெளியேறியது போர்ச்சுகல்… ரொனால்டோ ரசிகர்கள் அதிர்ச்சி!
- கொரோனா 3வது அலை தாக்க 8 மாதம் டைம்: வெளியான கணிப்பு!
- சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக வேண்டும்… அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!
50 ஆயிரத்திற்கு கீழ் வந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது 50 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,02,79,331 ஆக உயர்ந்தது. மேலும், புதிதாக 979 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,96,730 ஆக உயர்ந்துள்ளது.
அதோடு தொற்றில் இருந்து ஒரே நாளில் 58,578 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,93,09,607 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,72,994 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டின் இதுவரை 32,36,63,297 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
