3 வது அலை வருவதற்குள் 2 - 18 வயதினருக்கான தடுப்பூசி கிடைக்குமா?
2 - 18 வயதினருக்கான தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியாகும் என தகவல்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து, ஓய்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
மூன்றாம் அலை பரவலுக்கு வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்து வரும் சூழலில், மூன்றாம் அலையினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக பரிசோதனை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2 - 18 வயதினருக்கான தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்பதால் இதற்கான அனுமதி கிடைத்தவுடன் இந்த தடுப்பூசிகள் 2 - 18 வயதினருக்கு போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ரஷ்யாவின் ஃபைசர் தடுப்பூசி கிடைக்கும் பட்சத்தில் செப்டம்பருக்கு முன்னதாகவே 2 - 18 வயதினருக்கு தடுப்பூசி போடப்படும் என நம்பப்படுகிறது.