1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. cockroach janata party announce protest today

போராட்டம் நடத்தும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி!.. டெல்லியில் பரபரப்பு!...

cjp
சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் ஒரு வழக்கு விசாரணையில் இளைஞர்கள் கரப்பான் பூச்சி போல இருக்கிறார்கள் என்று ஏதோ சொல்ல அபிஜீத் திப்கே என்பவர் இன்ஸ்டாகிராமில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்கிற பக்கத்தை துவங்கினார். இது இளைஞர்களிடம் பெரும் வரவேற்பி பெற்று பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை விட அதிகமானோர் இந்த பக்கத்தை பின் தொடர்ந்தார்கள்.
 
இது பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. எனவே, அந்த இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அதே பேரில் வேறொரு புது பக்கம் தொடங்கப்பட்டு அதையும் பலரும் பின் தொடர தொடங்கினார்கள்..
 
இந்த பக்கத்தை துவங்கிய அபிஜீத் திப்கே ஜனநாயகத்தை நம்பி வெளிநாட்டிலிருந்து நேற்று இந்தியா வருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். ஒருபக்கம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் மூன்று பேரை செய்தி தொடர்பாளராகவும் அந்த இயக்கம் நியமித்துள்ளது.
 
அவர்கள் நேற்று செய்தியாளிடம் பேசினார்கள். அப்போது இந்திய கல்விமுறையின் தோல்விகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப் போவதாக அந்த கட்சி அறிவித்திருக்கிறது. ஆனால் டெல்லி போலீசார் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து விவகாரத்தில் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது போராட்டம் நடத்தவுள்ள நிலையில் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
ஸ்டாலின்தான் எங்களுக்கு சி.எம்!... படுங்க.. பட்டு திருந்துங்க!.. கொளத்தூரில் அழுத சத்யராஜ்!...