ஸ்டாலின்தான் எங்களுக்கு சி.எம்!... படுங்க.. பட்டு திருந்துங்க!.. கொளத்தூரில் அழுத சத்யராஜ்!...
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுக தோல்வியடைந்தது. 10 அல்லது 20 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது திமுகவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதைவிட குறிப்பாக திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் தான் போட்டுவிட்ட கொளத்தூர் தொகுதியிலேயே தோற்றுப் போனது திமுகவினரிடம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது திமுகவினருக்கு மட்டுமில்லாமல் திமுக ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் நேற்று கொளத்தூரில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ் ஸ்டாலின் எவ்வளவு பெரிய தலைவர்.. அவர் தலைவருக்கெல்லாம் தலைவர்.. அவர் இங்கு தோற்றிருக்கக் கூடாது. நீங்க படுங்க.. பட்டு திருந்துங்க.. தப்பு பண்ணாதான் உங்களுக்கு புரியும் என்று அழுதபடியே பேசினார்.
பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் ஸ்டாலின் மட்டுமே சிறந்த அரசியலை செய்து வருகிறார். 1967ம் வருடம் அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாடு நிமிர்ந்தது. அதன் பிறகு கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு வளமாகியது. அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற முக ஸ்டாலின் அவர்கள்தான் எங்களுக்கு இன்றும் முதலமைச்சர் என அவர் பேசினார். சத்யராஜ் அழுது கொண்டே பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
