1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (12:34 IST)

நிலவுக்கு புறப்படும் சந்திரயான் 3! - தேதியை அறிவித்தது இஸ்ரோ!

ISRO
இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி நிலையத்தால் நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட உள்ள சந்திராயன் 3 ஏவப்படும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.



உலக நாடுகள் பலவற்றின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களுக்கு நிகரான வளர்ச்சியையும், தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனம். கடந்த 2008ம் ஆண்டில் இஸ்ரோவின் இமாலய திட்டமான நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் திட்டம் தொடங்கப்பட்டது.

2008ம் ஆண்டில் சந்திராயன் 1 நிலவில் தரையிறங்கி இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு சாதனையை படைத்தது. அதை தொடர்ந்து செவ்வாய்க்கு மங்கள்யான் திட்டமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து நிலவு ஆராய்ச்சியில் இதுவரை எந்த நாடுகளும் கால் பதித்திராத நிலவின் பகுதியில் ஆய்வு செய்ய 2019ம் ஆண்டில் சந்திராயன் 2 புறப்பட்டது.

ஆனால் தரையிறங்க சில வினாடிகள் முன்பாக ஏற்பட்ட கோளாறால் அந்த திட்டம் தோல்வியை தழுவியது. இந்த நிலையில்தான் நிலவு ஆராய்ச்சிக்கான சந்திரயான் 3 திட்டத்தை இஸ்ரோ தொடங்கியது. அனைத்து கட்ட பணிகளும் முடிந்து சந்திரயான் 3 நிலவு பயணத்திற்கு தயாராக உள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சந்திரயான் குறித்து பேசியுள்ள இஸ்ரோ தலைவர் சோமநாத், சந்திரயான் 3 விண்கலத்தை ஜூலை 12ம் தேதியிலிருந்து ஜூலை 19ம் தேதிக்குள் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K