5.6 டன் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3.எம்.3!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் முதல் கனரக செயற்கைக்கோள் ராக்கெட்டான LVM3M3 இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் செயற்கைக்கோள் ஏவும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்தியாவின் இஸ்ரோவும் ஒன்று. பல நாடுகள் தங்கள் செயற்கைக்கோள்களை இஸ்ரோவின் உதவியுடன் விண்ணில் ஏவி வருகின்றனர். அதற்கேற்ப இஸ்ரோவும் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி தொடங்கி சிறிய ரக சேட்டிலைட்டுகளை ஏவும் எஸ்.எஸ்.எல்.வி உள்ளிட்ட பல ராக்கெட்டுகளை செயற்கைக்கோள் ஏவுதலுக்கு பயன்படுத்தி வருகின்றது.
ஆனால் டன் கணக்கிலான கனரக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதில் இஸ்ரோ பின் தங்கியே இருந்தது. இந்நிலையில் கனரக செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவ LVM3-M3 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியது. அதன்மூலம் இன்று 36 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்களை கொண்ட ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது இஸ்ரோ.
இதில் உள்ள செயற்கைக்கோள்களின் மொத்த எடை 5.6 டன் ஆகும். இந்த அளவு அதிக எடை கொண்ட ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது விண்வெளி ஆய்வில் மேலும் ஒரு படி இஸ்ரோவை முன்னகர்த்தியுள்ளதாக அறிவியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K