வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 29 மே 2023 (12:05 IST)

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது GSLV-F12 ராக்கெட்..!

இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப்1 என்ற ராக்கெட் இன்று காலை 10.42 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில் வெற்றிகரமாக அந்த ராக்கெட் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக  இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எஃப்1 ராக்கெட் மற்றும் என்.வி.எஸ்01 செயற்கைக்கோளை சுமந்தபடி இன்று காலை விண்ணில் பாய்ந்தது. 
 
இதற்கான கவுண்டவுன் நேற்று காலை தொடங்கிய நிலையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. 2232 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோளில் என்விஎஸ்01 என்ற செயற்கைக்கோள் உள்ளது என்பதும் இது கடல் வான் தரைவழி போக்குவரத்து வழிகாட்டிகளுக்கு பயன்படும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இஸ்ரோ அனுப்பிய 15வது ராக்கெட் இது என்பதும் இந்த ராக்கெட்டில் செயற்கைக்கோள் எரிபொருள் உள்பட 420 டன் எடையை சுமந்து சென்றதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.
 
Edited by Mahendran