தொடர்புடைய செய்திகள்
- குரங்குகளுடன் செல்ஃபி எடுக்க ஆசை! விபரீத ஆசையால் உயிரிழந்த ஆசிரியர்!
- மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சியான திருமணம்!
- பீகார் வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா! – காலச்சக்கர பூஜையில் அதிர்ச்சி!
- பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!
- பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: எம்.பி சுஷில் குமார் மோடி எச்சரிக்கை!
பிகாரை அடுத்து மகாராஷ்டிரத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு?
பீகாரில் தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மத்திய அரசு அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டது
இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என சமீபத்தில் அறிவித்தார். இதனை அடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ள நிலையில் அம்மாநில முதல்வர் விரைவில் அதற்கு ஒப்புக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக பாமக உள்பட ஒருசில கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
