1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. BJP MP warning to Bihar government

பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: எம்.பி சுஷில் குமார் மோடி எச்சரிக்கை!

Bihar
பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என பீகார் மாநில அரசுக்கு பாஜக எம்பி சுஷில்குமார் மோடி எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பீகார் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர் என்பதும் இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் அம்மாநிலத்தில் விஷச் சாராயம் அதிகமாக விற்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் பாஜக எம்பி சுஷில்குமார் மோடி இது குறித்து பேட்டியளித்த போது பீகாரின் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டத்தின்படி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த பிரச்சனையில் மக்களுக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பொங்கல் தொகுப்பு ரூ.1000 எப்போது? முதல்வர் முக்கிய ஆலோசனை!