திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (16:01 IST)

முதல்வர் செய்தது தான் மரபை மீறிய செயல்: அண்ணாமலை

annamalai
தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது மரபை மீறிய செயல் என அரசியல் கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில் ஆளுநர் உரையாற்றிய பின் முதல்வர் பேசியதுதான் மரபை மீறிய செயல் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் இது குறித்து கூறிய போது, திமுக தங்கள் கட்சியின் பொதுக் கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் ஆளுநர்களை சட்டப்பேரவையில் இருந்து நீக்க சேர்க்க சபாநாயகருக்கு அதிகார வரம்பு உள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
ஆளுநர் பேசியபின் மரபிற்கு புறம்பாக முதல்வர் பேசியது முற்றிலும் தவறானது என்றும் தமிழகம் என பாரதிதாசன் குறிப்பிட்டுள்ள நிலையில் ஆளுநர் தமிழகம் என்று சொன்னதால் என்ன தாழ்வு ஏற்பட்டு விட்டது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
 
Edited by Mahendran