1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. BRS party candidate list released telungana election

115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்.. இரண்டு தொகுதிகளில் முதல்வர் போட்டி..!

Election Commission
தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் கட்சி தற்போது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய மும்முனை போட்டிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்வர் கேசிஆரின்  பிஆர்எஸ் கட்சி தீவிரமாக வேலை செய்து வருகிறது 
 
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார். 115 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதில் இரண்டு தொகுதிகளில் முதல்வர் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னை பள்ளி மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!