திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (17:06 IST)

கையிருப்பு வெறும் ரூ.15000.. வீடு, நிலம் எதுவும் இல்லை.. காங்கிரஸ் வேட்பாளரின் சொத்து மதிப்பு..!

கேரள மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் தன்னிடம் வெறும் 15000 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும் வீடு நிலம் உள்ளிட்ட எந்த விதமான அசையா சொத்துக்களை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  
 
கேரள மாநிலத்தில் உள்ள புதுப்பள்ளி என்ற பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாண்டி உம்மன் என்பவர் வேட்ப மனு தாக்கல் செய்துள்ளார். 
 
அவர் தனது வேட்ப மனுவில் தன்னிடம் கையேடு 15 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும் வங்கி கணக்கில் 15 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னிடம் வீடு நிலம் உள்ளிட்ட எந்த விதமான அசையா சொத்துக்களும் இல்லை என்று அவர் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva