தொடர்புடைய செய்திகள்
- பிடிக்க முயன்றபோது கடித்த நாகப்பாம்பு! – பிரபல ‘பாம்பு மனிதர்’ மரணம்!
- திருமணத்திற்கு முந்தைய நாள் உயிரிழந்த மணமகன்... பெற்றோர் செய்த நெகிழ்ச்சியான செயல்!
- முதல்முறையாக பட்டுவேட்டி, பட்டுசட்டைக்காக ஒரு ஷோரூம்: ராமராஜ் காட்டன் அசத்தல்
- ராணி மரணத்தால் நடந்த நன்மை: ஒன்றிணைந்த அண்ணன் –தம்பி!
- ராணி இரண்டாம் எலிசபெத் மரணம்: வரலாறு நிற்கும் தருணம்
முதலிரவு அறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம் பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை!
முதலிரவு அறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஆந்திர மாநிலம் அன்னமய்யா என்ற மாவட்டத்தில் சமீபத்தில் வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. இதனை அடுத்து அவர் முதலிரவு அறைக்குள் மிகுந்த கனவுகளுடன் உள்ளே நுழைந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்
இதனையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
உயிரிழந்த மணமகனின் பெயர் துளசி பிரசாத் என்றும் அவர் மதன பள்ளியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 13ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் என்றும் விசாரணையில் தெரியவந்தது
முதலிரவு அறைக்கு சென்ற ஒரு சில நிமிடங்களில் மணமகன் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
