சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே… குடிமகன்கள் வேதனை!!
தெலுங்கானாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2.43 லட்சம் மதுபாட்டில்களை ஆந்திர போலீஸார் கைப்பற்றி அழித்தனர்.
5.47 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். என்டிஆர் மாவட்டத்தில் உள்ள நந்திகம என்ற இடத்தில் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன. உயர் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.
தெலுங்கானாவில் இருந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டது. இதுவரை 2,000 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்து 226 வழக்குகளை பதிவு செய்துள்ளோம் என்று விஜயவாடா காவல்துறை ஆணையர் காந்தி ராணா டாடா தெரிவித்தார்.
மாநில அரசின் உத்தரவின் பேரில் ஆந்திர மாநில போலீசார் நகரின் புறநகர் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிறப்பு அமலாக்கப் பணியகம் (SEB) கர்னூலில் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 66,000 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தது. நாடு முழுவதும் சட்டவிரோதமான போக்குவரத்து மற்றும் மது விற்பனையில் ஈடுபடுபவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு SEB காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஆந்திரப் பிரதேச காவல்துறை எலுரு மாவட்டத்தில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள 33,934 சட்டவிரோத மதுபாட்டில்களை அழித்தது என்பது கூடுதல் தகவல்.