ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (09:44 IST)

பிடிக்க முயன்றபோது கடித்த நாகப்பாம்பு! – பிரபல ‘பாம்பு மனிதர்’ மரணம்!

ராஜஸ்தானில் பாம்பு பிடிக்கும் வன உயிர் ஆர்வலர் ஒருவர் பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷாரு பகுதியை சேர்ந்தவர் வினோத் திவாரி. கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் பணியை செய்து வரும் இவர், குடியிருப்பு பகுதிகளில் நுழையும் பாம்புகளை பிடித்து வனப்பகுதிகளில் விடும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருந்தார்.

சமீபத்தில் கொஹமெடி பகுதியில் உள்ள கடை ஒன்றிற்குள் பாம்பு புகுந்துவிட்டதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அப்பகுதிக்கு சென்ற வினோத் பாம்பை பிடித்துள்ளார். பின்னர் அதை பைக்குள் நுழைக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக நாகப்பாம்பு அவரை தீண்டியது.

இதனால் அங்கிருந்து உடனடியாக மருத்துவமனைக்கு நடந்து சென்றுள்ளார். ஆனால் சில நிமிடங்களிலேயே விஷம் உடலில் பரவியதால் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.