1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Boris Johnson india visit cancel

இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை திடீர் ரத்து: காரணம் இதுதான்!

இங்கிலாந்து
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டம் நடைபெறும் போது வெளிநாட்டு பிரமுகர்கள் சிலர் சிறப்பு விருந்தினராக வருகை தருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க இருந்தார் 
 
இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இருநாட்டு சார்பிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய பயணத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
எனவே இந்த ஆண்டு சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் இந்தியாவிற்கு வருகை தர மாட்டார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
கொரோனா பரிசோதனை கட்டணம் பாதிக்கும் மேல் குறைப்பு: தமிழக அரசு ஆணை!