தொடர்புடைய செய்திகள்
- செம்பரமபாக்கம் ஏரியில் இருந்து இன்று நீர் திரப்பு!
- மின்சார வேலியில் சிக்கி ஆண்யானை பலி – நில உரிமையாளர் கைது!
- இன்றும் தங்கம் விலை உயர்வு… இரண்டே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் அதிகரிப்பு!
- அட தமன்னாவா இது… அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய புகைப்படம்!
- தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை… குஷ்புவின் பொறுப்பற்ற கருத்து – நெட்டிசன்ஸ் கலாய்!
உருமாறிய கொரோனா…. இந்தியாவில் எத்தனைப் பேருக்கு தெரியுமா?
இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு 58 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக மோசமாக பரவி லட்சக்கணக்கானவர்களை பலியாக்கி உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து நாட்டிலிருந்து பரவிவருகிறது. இதனை அடுத்து பல நாடுகள் இங்கிலாந்து நாட்டிலிருந்து வரும் விமானத்தை தடை செய்துள்ளன என்பதும் இங்கிலாந்து நாடும் தன்னுடைய நாட்டில் பரவி வரும் புதிய உருமாரிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் இந்த உருமாறிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 58 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன,
