திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (13:09 IST)

இங்கிலாந்து ஆல்ரவுண்டருக்கு கொரோனா – இலங்கையில் நடக்குமா தொடர்?

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மொயின் அலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியினர் இலங்கைக்குச் சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருந்தனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அதையடுத்து அவரும் அவருடன் நெருக்கமாக அமர்ந்து பயணித்த கிறிஸ் வோக்ஸ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். மற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் அவர்கள் 14 ஆம் தேதி நடக்கும் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.