1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: சனி, 26 அக்டோபர் 2019 (16:54 IST)

ஹரியானாவில் ஆட்சி அமைக்கிறது பாஜக.. முதல்வராகிறார் கட்டார் !

கடந்த 21 ஆம் தேதி மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது. 288 தொகுதிகளைக் கொண்ட  மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக -சிவசேனா கூட்டணிக்கட்சிகள்  161 இடங்களைப் பெற்றது.
இந்தக் கூட்டணியில் 164 இடங்களில் போட்டியிட்ட பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 124 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது.
 
காங்கிரஸ் - தேசியவாத கூட்டணி 98 இடங்களைப் கைப்பற்றியது.இம்முறை 147 தொகுதிகளில்  போட்டியிட்ட காங்கிரஸ் 44 இடங்களிலும், 121 தொகுதிகளில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களில் வெற்றி பெற்றது.
 
எனவே, மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவின் ஆட்சியே நடக்கவுள்ளதால் அக்கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் பாஜக - சிவசேனா கூட்டணிகட்சிகளுகு இடையே போட்டி காணப்படுகிறது.
 
ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டசபைத் தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளும் வெற்றி பெற்றன. 
 
எனவே ஆட்சி அமைக்கபோதுவான பலம் இல்லாததால் அங்க் தொங்குசட்டசபை ஏற்பட்டது.
 
இந்நிலையில் அம்மாநிலத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் நிலையில்  இருந்த  ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
 
பாஜவுக்கு வெறும் 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவே போதுமானதாக இருந்தபோது துஷ்யந்த சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி பாஜவுக்கு ஆதரவு தருவதாக நேற்று அறிவித்தது.
 
இந்நிலையில்   பாஜகவின் முன்னாள்  முதல்வர் மனோகர்லால் கட்டார் மீண்டும் முதல்வராகவும், ஜனநாயக் ஜனதா கட்சித்தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணைமுதல்வராகவும் பதவியேற்கவுள்ளனர்.