1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (21:37 IST)

மோடி மேஜிக் சரிந்து வருகிறதா?

கடந்த ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அசுரத்தனமான வெற்றியைப் பெற்று பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தது. மோடி மேஜிக் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதால் மீண்டும் பாஜக ஆட்சியை அமைத்து உள்ளதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் மக்களவை தேர்தலுக்கு பின் முதல் முறையாக மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தலை பாஜக சந்தித்தது. இந்த இரண்டு மாநிலங்களிலும் மிகப்பெரிய அளவில் மெஜாரிட்டியுடன் பாஜக வெற்றி பெறும் என கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன
 
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற்று விட்டாலும், கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் காங்கிரஸ் மகாராஷ்ட்ராவில் 18 தொகுதிகள் கடந்த தேர்தலை விட அதிகம் பெற்று உள்ளது 
 
அதேபோல் ஹரியானாவில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஏதாவது ஒரு கட்சியை கூட்டணிக்கு அழைத்துதான் ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் காங்கிரசில் வளர்ச்சி அதிகமாகி இருப்பது மற்றும் அங்கு ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்சி அபரிதமான வளர்ச்சி அடைந்துள்ளதும் பாஜகவின் பின்னடைவுக்கு காரணமாக உள்ளது 
 
இதனாஅல் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் சக்சஸ் ஆன மோடி மேஜிக் ஆறே மாதங்களில் சரியத் தொடங்கி உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களும், அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது