இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த சத்ரபதி சிவாஜியின் வாரிசு!
மராட்டிய சிங்கம் என்று பெயரெடுத்தவர் சத்ரபதி சிவாஜி. அவரை இன்னும் மராட்டிய மக்கள் வணங்கி வருகின்றனர். ஆனால் அவருடைய வாரிசு ஒருவர் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார்.
சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மராட்டிய மன்னரான சத்ரபதி சிவாஜியின் வாரிசான உதயன்ராஜே என்பவர் சதாரா தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். இவரை எதிர்த்து சரத் பவாரின் நண்பரான ஸ்ரீநிவாஸ் பாட்டீல் போட்டியிட்டார்.
நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் சதாரா தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீநிவாஸ் பாட்டீல் 6.36 லட்சம் வாக்குகள் பெற்று உதயன்ராஜே போஸலேயை தோற்கடித்தார்.
மராட்டிய மன்னரின் வாரீசு மராட்டிய மண்ணிலேயே தோல்வி அடைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.