1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (09:31 IST)

சிவசேனாவை ஓவர்டேக் செய்த நோட்டா!!

மகாராஷ்டிராவில் நோட்டா மற்ற அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடம் பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதன் படி, பிஜேபி-சிவசேனா கூட்டணி பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

இந்நிலையில் லத்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட தீரஜ் தேஷ்முக், 1,34,615 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவ சேனா வேட்பாளர் ரவி ராம்ராஜே 13,459 வாக்குகளே பெற்றார்.

ஆனால் இந்த தொகுதியில் சிவசேனா வேட்பாளரை விட நோட்டாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன. அதன் படி நோட்டாவுக்கு 27,449 வாக்குகள் விழுந்துள்ளன. இது சிவசேனா வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட அதிகமாகும். இதனால் சிவசேனாவை பின்னுக்கு தள்ளி நோட்டா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.