வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (21:28 IST)

பாஜக - சிவசேனா ஆட்சி அமைப்பதில் சிக்கலா?

சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக-சிவசேனா கூட்டணி 158 தொகுதிகளில் வெற்றி உள்ளது. இதில் மட்டும் 105 தொகுதிகளிலும் சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது 
 
எனவே பாஜக மற்றும் சிவசேனா ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டிய நிலை தற்போது உள்ளது
 
இந்த நிலையில் ஆட்சி அமைப்பதில் பாதி அதிகாரம் தங்களுக்கு வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரேவுக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என்றும் சிவசேனா கோரிக்கை வைத்துள்ளது 
 
மேலும் மகாராஷ்டிராவில் சமபங்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என சிவசேனா வலியுறுத்திய நிலையில் பாஜக அதிகாரங்களை காண்பிக்கக் கூடாது என அக்கட்சி தனது அதிகாரபூர்வ நாளிதழில் வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி அபரீதமான வளர்ச்சி அடைந்துள்ளதாக சிவசேனா பாராட்டியுள்ளதை அடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைக்குமா? என்ற வதந்தி பரவியது 
 
ஆனால் இந்த வதந்திக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முற்றுப்புள்ளி வைத்தார். மக்கள் எங்களை எதிர்க்கட்சி வரிசையில் உட்கார தீர்ப்பு அளித்துள்ளனர். அதனை மாற்றி அமைக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இதனையடுத்து சிவசேனாவுடன் சேர்ந்து சரத்பவார் கட்சி ஆட்சி அமைக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது