செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2019 (21:04 IST)

ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி: சுயேட்சைகள் ஆதரவு என தகவல்

ஹரியானா மாநிலத்தில் சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. நாளை காலை நடைபெற உள்ள அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் கட்டார் மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போது இன்னும் ஆறு எம்எல்ஏக்கள் பாஜக ஆட்சி அமைக்க தேவைப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க சுயேட்சைகள் முன்வந்துள்ளதால் மீண்டும் ஆட்சி அமைக்க விருப்பதாகவும் முதலமைச்சராக மீண்டும் கட்டார் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன 
 
ஹரியானாவில் மொத்தம் ஏழு சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளதாகவும் 7 பேரும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. முன்னதாக சுயேட்சை எம்.எல்.ஏக்களுடன் பாஜக தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக இதனை அடுத்து பாஜக ஆட்சி அமைவது உறுதி என்றும் கூறப்படுகிறது