1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. BJP president candidate is draupathi murmu

பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!

draupati murmu
பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிப்பு!
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை 17ஆம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. 
 
பாஜக தரப்பில் ஒரு வேட்பாளரும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரும் நேருக்கு நேர் மோதல் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் எதிர் கட்சிகளின் வேட்பாளராக நேற்று யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாஜக வேட்பாளராக திரெளபதி முர்மு என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்
 
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒரு பெண் அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று புதிய குடியரசுத் தலைவராவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா?