செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (20:10 IST)

அதிமுகவை கைப்பற்ற துடிக்கிறது பாஜக: நாஞ்சில் சம்பத்

nanjil
அதிமுகவை கைப்பற்ற பாஜக துடிக்கிறது என நாஞ்சில் சம்பத் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தற்போது அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து மௌனமாக பாஜக வேடிக்கை பார்த்து வருகிறது. 
 
இந்த இரண்டு அணிகளில் எந்த அணி தங்களிடம் ஆதரவு கேட்கின்றதோ அந்த அணிக்கு ஆதரவு கொடுத்து அந்த அணியை தன் கைவசம் வைத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இது குறித்து நாஞ்சில் சம்பத் அவர்கள் கூறியபோது எம்ஜிஆருக்கு அறிமுகமில்லாத ஒரு இடைச்செருகல் அந்த கட்சியை கைப்பற்ற துடிக்கிறது என்றும் பாஜகவின் நரித்தனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பலிகடாவாகி இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது