புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (13:17 IST)

பாஜகவின் பழி வாங்கும் படலம் - நேஷனல் ஹெரால்டு குறித்து காங். விமர்சனம்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் இதுவரை முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என காங்கிரஸ் கேள்வி.  
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் கடந்த 4 நாட்களாக காங்கிரஸ் ராகுல்காந்தி அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ஆஜர் ஆனார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் கடந்த நான்கு நாட்களில் 38 மணி நேரம் விசாரணை செய்துள்ளதாகவும் இன்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதனையடுத்து இன்று 5வது நாளாக ராகுல்காந்தி ஆஜராவார் என்றும் அனேகமாக இன்றுடன் அவரிடம் விசாரணை முடிவடைந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியை விசாரணை செய்துவரும் அமலாக்கத் துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் செய்து வருகின்றனர். 
 
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தனது சமீபத்திய பேட்டியில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் இதுவரை முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணம் யாருக்கு கைமாற்றப்பட்டது என அமலாக்கத்துறை விளக்க வேண்டும் எனவும் ராகுல் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியால் அமலாக்கத்துறை மூலம் பாஜக பழிவாங்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.