தொடர்புடைய செய்திகள்
- தெரியாமல் ட்விட் செய்துவிட்டேன்: புலம்பெயர் தொழிலாளர் குறித்து ட்விட் செய்த பாஜக பிரபலம்..!
- அறநிலையத்துறைக்கு தெரியாமல் நடந்த நிகழ்ச்சி: குளத்தில் 5 பேர் மூழ்கிய சம்பவம் குறித்து அமைச்சர்..!
- இது சரிபடாது.. பாஜக போக வேண்டியதுதான்! – மாஜி அமைச்சரின் மனமாற்றம்?
- ''அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன்''-சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு மிரட்டல் கடிதம்...
- நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு
தாஜ்மஹாலை இடித்துவிட்டு கோவில் கட்ட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!
தாஜ்மஹால் மற்றும் குதுப்மினாரை இடித்துவிட்டு கோவில் கட்ட வேண்டும் என அசாம் மாநில பாஜக எம்எல்ஏ ரூப்ஜோதி என்பவர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்று புத்தகங்களில் ஏற்கனவே முகலாய மன்னர்களின் பாடங்கள் நீக்கப்பட்டு வருவதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் குதுப்மினார் ஆகியவற்றை தகர்க்க வேண்டும் என்றும் அந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்றும் அசாம் மாநில பாஜக எம்எல்ஏ ருப்ஜோதி தெரிவித்துள்ளார்.
தாஜ்மஹாலையும் குதுப்மினாரையும் இடித்து தடை மட்டமாக வேண்டும் என்றும் அந்த இடத்தில் அழகான இந்து கோயில்களை கட்டி எழுப்ப வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மும்தாஜ் இறந்த பிறகு ஷாஜகான் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார் என்றும் இதை எப்படி உலக அதிசயங்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்து மன்னர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்திலிருந்து தான் தாஜ்மகாலை ஷாஜகான் கட்டியுள்ளார் என்றும் அது நம்முடைய பணம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Edite by Siva
அடுத்த கட்டுரையில்
