வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (15:13 IST)

கனடாவில் இருந்து காதலரை தேடி வந்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி: ஹரியானாவில் அதிர்ச்சி சம்பவம்..!

கனடாவில் படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவர் காதலரை பார்ப்பதற்காக இந்தியா வந்த இடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் மோனிகா என்பவர் கனடாவில் மேல் படிப்பு படித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் சுனில் என்பவரை காதலித்து உள்ளார். இந்த நிலையில் பெற்றோர்களுக்கு தெரியாமல் அடிக்கடி அவர் சுனிலை இந்தியா வந்து பார்த்துள்ளதாகவும் சமீபத்தில் அவர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் சுனிலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளது என்ற விவரம் தெரியாமலே அந்த மோனிகா இருந்துள்ளார். இந்த நிலையில் மோனிகாவை திருமணம் செய்து கொண்டு அவருடன் கனடா போய் செட்டில் ஆகிவிடலாம் என்று சுனில் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையே இது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து சுனில் மோனிகாவை கொலை செய்து தனது பண்ணை வீட்டில் புதைத்து விட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தற்போது தான் விசாரணைக்கு பின் வெளியே தெரிந்து உள்ளது என்பதும் இதனை அடுத்து சுனிலை போலீசார் கைது செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva