1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 ஏப்ரல் 2023 (10:00 IST)

இது சரிபடாது.. பாஜக போக வேண்டியதுதான்! – மாஜி அமைச்சரின் மனமாற்றம்?

Thoppu Vengadacahalam
முன்னாள் அதிமுக அமைச்சரும், இந்நாள் திமுக உறுப்பினருமான தோப்பு வெங்கடாச்சலம் பாஜகவில் இணைய உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாகவும், அதிமுக சட்டசபையில் அமைச்சராகவும் இருந்தவர் தோப்பு வெங்கடாச்சலம். 2011, 2016ம் ஆண்டுகளில் பெருந்துறை எம்.எல்.ஏவாக இருந்த தோப்பு வெங்கடாச்சலம், 2016 – 2021ல் சுற்றுசூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியில் அவர் செல்வாக்கு இழந்தார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பெருந்துறையில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் கட்சியிலிருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின் திமுகவில் இணைந்த தோப்பு வெங்கடாச்சலம் தனக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு முக்கிய பதவிகள் ஏதும் வழங்காமல் திமுக இருந்து வருகிறது.

இதனால் தற்போது திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணையலாமா என்று யோசித்து வருகிறாராம் தோப்பு வெங்கடாச்சலம். இதுகுறித்து பாஜகவுடன் அவர் பேசி வருவதாகவும், விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K