1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bhojpuri Actor and IPL Commentator Mani Meraj Arrested

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: ஐபிஎல் வர்ணனையாளர் அதிரடி கைது..!

மணி மெராஜ்
பிரபல போஜ்புரி நடிகர், ஐ.பி.எல். வர்ணனையாளர் மற்றும் யூடியூபர் மணி மெராஜ் என்பவரை காசியாபாத் போலீசார் பிகாரின் தலைநகர் பாட்னாவில் கைது செய்துள்ளனர்.
 
கோடிக்கணக்கான ஃபாலோயர்களை கொண்ட இவர் மீது, ஒரு பெண் யூடியூபர் பாலியல் பலாத்காரம், கட்டாய மதமாற்றம், கருக்கலைப்பு மற்றும் பல லட்சம் ரூபாய் மோசடி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
 
மணி மெராஜ் ஒரு போலி அடையாளத்தில் பழகி, மயக்க மருந்து கொடுத்து, திருமண ஆசை காட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்த இந்த கொடுமையின்போது, தன்னை மதம் மாற சொல்லி வற்புறுத்தியதாகவும், மாட்டுக்கறி உண்ண கட்டாயப்படுத்தியதாகவும், கருக்கலைப்பு செய்ய நெருக்கடி கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.
 
இவர் முன்னர் கசாப்புக் கடைக்காரராக பணியாற்றி, பின்னர் நகைச்சுவை வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் தான் இந்த மணி மெராஜ்.
 
பாதிக்கப்பட்ட பெண், மணி மெராஜுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
பீகார் தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள்: அனைத்து தேர்தல்களிலும் தொடருமா?