செவ்வாய், 18 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 அக்டோபர் 2025 (10:26 IST)

டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பண மோசடி செய்த கும்பல்.. டெல்லி சென்று கைது செய்த தமிழக காவல்துறை..!

டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பண மோசடி செய்த கும்பல்.. டெல்லி சென்று கைது செய்த தமிழக காவல்துறை..!
இணையவழியில் பொதுமக்களை 'டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டி, பண மோசடி செய்த மூன்று குற்றவாளிகளை தமிழகக் காவல்துறை டெல்லியில் கைது செய்துள்ளது.
 
'ஆன்லைன்' வாயிலாகப் பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில், தமிழக சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் திடீர் சோதனைகளை நடத்தினர். இதன் விளைவாக, சென்னையில் பதுங்கியிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குறுஞ்செய்தி அனுப்ப உதவும் 15 'சிம் பாக்ஸ்'கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
 
விசாரணையில், இக்கும்பலின் தலைவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோஹல் அலாம் நுத்தீன் என்பதும், அவர் டெல்லி, மும்பை மற்றும் பீகார் ஆகிய இடங்களில் கூட்டாளிகளை பதுக்கி வைத்து செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.
 
இதையடுத்து  தனிப்படையினர் டெல்லி, மஹாராஷ்டிரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, டெல்லியில் பதுங்கி இருந்த தாரிக் அலாம், லோகேஷ்குமார் மற்றும் அசோக்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் 44 'சிம் பாக்ஸ்'களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சோஹல் அலாம் நுத்தீனை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
 
Edited by Mahendran