பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது; முடிவுகள் நவம்பர் 14-ல் அறிவிக்கப்படும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், இந்தத் தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் 17 புதிய முயற்சிகள் பின்வருமாறு:
வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தல் (SIR): தகுதியற்றவர்களை நீக்கி, தகுதியானவர்களை சேர்த்தல்.
ஊதிய உயர்வு: BLO-க்கள் உள்ளிட்ட தேர்தல் பணியாளர்களுக்கு ஊதியம் இரட்டிப்பு.
EPIC அட்டை விநியோகம்: 15 நாட்களுக்குள் EPIC அட்டை இலவசமாக வழங்கப்படும்.
தெளிவான VIS: வாக்காளர் தகவல் சீட்டில் வரிசை எண்கள் தெளிவாகக் காட்டப்படும்.
வாக்காளர் வரம்பு: நெரிசலை தவிர்க்க ஒரு வாக்கு சாவடிக்கு 1,200 பேர் மட்டுமே.
மொபைல் வைப்பு வசதி: வாக்கு சாவடிக்கு வெளியே மொபைல் வைக்க கவுன்டர்கள்.
வலை ஒளிபரப்பு: அனைத்து வாக்கு சாவடிகளிலும் 100% நிகழ்நேர வெப்காஸ்டிங்.
BLA பயிற்சி: பூத் லெவல் ஏஜெண்டுகளுக்குப் பயிற்சி.
போலீஸ் பயிற்சி: சட்டம்-ஒழுங்கு பலப்படுத்த போலீஸ் அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி.
டிஜிட்டல் தளம் (ECINet): நிகழ்நேர வாக்குப்பதிவு விகிதங்களைப் புதுப்பிக்கவும், சேவைகளை வழங்கவும் புதிய செயலி.
EVM/VVPAT சீர்திருத்தம்: EVM-களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம் முதன்முறையாக இடம்பெறும்.
VVPAT எண்ணுதல் கட்டாயம்: EVM தரவு முரண்பட்டால் VVPAT சீட்டுகளை எண்ணுவது கட்டாயம்.
தபால் வாக்கு எண்ணுதல்: EVM-களில் இரண்டாவது கடைசிச் சுற்று தொடங்கும் முன் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட வேண்டும்.
அதிகாரிகளுக்கு அடையாள அட்டை: BLO-க்களுக்கு நிலையான அடையாள அட்டைகள்.
வேட்பாளர் பூத்கள்: வாக்குச் சாவடிக்கு 100 மீட்டருக்கு வெளியே வேட்பாளர்கள் பூத் அமைக்க அனுமதி.
டிஜிட்டல் குறியீட்டு அட்டைகள்: தேர்தல் தரவை எளிதாக அணுகுவதற்கான தொழில்நுட்ப அமைப்பு.
85+ வாக்காளருக்குச் சலுகை: 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி.
இந்தச் சீர்திருத்தங்கள் மூலம் வெளிப்படையான, திறமையான தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
Edited by Siva