ஆபாச இணையதளத்தை ஒரே ஒரு க்ளிக் செய்தால் போதும்.. பேங்க் பேலன்ஸ் மொத்தமும் காலி..
சமூக வலைதளங்களில் வரும் ஒரு சாதாரண விளம்பரமே அடுத்த சைபர் மோசடிக்கான கதவாக மாறக்கூடும் என்ற எச்சரிக்கை வெளியாகியுள்ளது. குறிப்பாக Facebook, Instagram போன்ற தளங்களில் ஆபாச அல்லது வயது வந்தோருக்கான வீடியோக்கள் என்ற பெயரில் சில விளம்பரங்கள் பயனர்களை கவர்ந்து, போலியான இணையதளங்களுக்கு அழைத்துச் செல்கின்றன.
அங்கு வீடியோவை பார்க்க வேண்டும் என்ற பெயரில் APK எனப்படும் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்படுகிறது. Google Play Store-க்கு வெளியே இருந்து அந்த செயலியை நிறுவியதும், அது தேவையற்ற மற்றும் ஆபத்தான அனுமதிகளை கேட்கக்கூடும். குறிப்பாக Accessibility permission வழங்கப்பட்டால், மொபைல் திரையை கண்காணிப்பது, பிற செயலிகளை இயக்குவது, OTP உள்ளிட்ட முக்கிய தகவல்களை திருடுவது போன்ற ஆபத்துகள் ஏற்படலாம்.
Night Play, Reloop, Kyss, Vimo, Rivo, Nexo, Vixa உள்ளிட்ட பெயர்களில் சில தீங்கிழைக்கும் செயலிகள் இருப்பதாக இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) எச்சரித்துள்ளது.
எனவே, சமூக வலைதள விளம்பரங்களை பார்த்து தெரியாத APK கோப்புகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது. Google Play Store போன்ற நம்பகமான தளங்களில் மட்டுமே செயலிகளை நிறுவ வேண்டும். Google Play Protect-ஐ இயக்கி வைத்திருப்பதும், மொபைலை தொடர்ந்து அப்டேட் செய்வதும் அவசியம்.
ஏற்கனவே சந்தேகமான செயலியை நிறுவியிருந்தால், உடனடியாக அதை நீக்க முயற்சித்து, வங்கி மற்றும் UPI பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும். பண மோசடி ஏற்பட்டால் இந்திய சைபர் குற்ற உதவி எண் 1930-ஐ உடனடியாக தொடர்புகொள்வது முக்கியம்.
Edited by Siva
