தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் ஆணையத்தின் முன் போராடிய எம்பிக்கள் கைது!
- புகைப்பிடிப்பதை முறைத்துப் பார்த்த இளைஞரை கொன்ற இளம்பெண்கள் கைது
- வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்வதிபுரம் மக்களை கைது செய்வதா? அன்புமணி
- நான் ஒரு பெருமைமிக்க இந்து.. மாட்டிறைச்சி சாப்பிட மாட்டேன்: நடிகை கங்கனா ரனாவத்..!
- கர்ப்பமான மாணவி.. கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ! – கருவை கலைத்த டாக்டர் கைது!
சமோசாவுக்குள் பீஃப் கலந்து விற்ற 6 பேர் கைது: குஜராத் போலீசார் நடவடிக்கை..!
குஜராத் மாவட்டத்தில் சமோசாவில் மாட்டுக்கறி கலந்து விற்பனை செய்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் வதேரா என்ற பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சமோசாவில் மாட்டு இறைச்சி சேர்ந்து விற்பனை செய்ததற்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் தயாரித்த சமோசா பரிசோதனைக்காக ஆய்வுக்கு அனுப்பிய காவல்துறையினர் ஆய்வு முடிவில் சமோசாவில் மாட்டு இறைச்சி கலந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடமை உரிமையாளர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சமோசாவை மொத்தமாக தயார் செய்து பல்வேறு உணவகங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி உள்ளதாகவும் அந்த கடைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சமோசா விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது
சமோசாவில் மாட்டிறைச்சி கலந்த விஷயத்தை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் இறைச்சி கலந்த சமோசா என்று கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் லாபம் ஈட்டும் நோக்கில் பசுவின் இறைச்சியை சமோசாவில் கலந்து விற்பனை செய்ததை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
Edited by Siva
